Categories
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் ஊழல் முறைகேடு…. முதல்வர் ஆதித்யநாத் அதிரடி உத்தரவு….!!!!

அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாக அறக்கட்டளை மீது எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து உள்ளன. ராமர் கோவிலுக்காக பேக் பைசி கிராமத்தில் 1.208 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ரூ.18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியிருப்பதாகவும், இதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாடியை சேர்ந்த மாநில முன்னாள் மந்திரி பவன்சிங் ஆகியோர் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் பல கோடி முறைகேடு நடந்துள்ளதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டிய நிலையில், நில முறைகேடு தொடர்பான விவகாரத்தில் அறிக்கை அளிக்க ராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். 2 கோடிக்கு வாங்கிய நிலத்தை சில நிமிடங்களிலேயே ரூ.18.5 கோடிக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |