Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மா & அப்பாவாகிவிட்டோம்…. 1 இல்ல 2…. “நயனும், நானும் செம ஹேப்பி”…. வாழ்த்து மழையில் நனையும் தம்பதி..!!

இரட்டை குழந்தை பிறந்த நயனுக்கும் விக்கிக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

Nayanthara-Vignesh wedding live updates: Kollywood directors arrive

அப்போது தான் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நயன்தாரா. அதன்படி விக்கி -நயன் இருவரின் திருமணமும் சென்ற ஜூன் மாதம் 09ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய நடிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது.

Nayan and Vicky's wedding party to happen in this place! - Deets inside -  Tamil News - IndiaGlitz.com

திருமணம் முடிந்த பிறகு ஹனிமூனுக்காக முதலில் தாய்லாந்துக்கு சென்றார்கள். இதன்பின் இரண்டாவது முறையாக ஸ்பெயினுக்கு ஹனிமூன் சென்றார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இதன் பின்னர் இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்.

Image

இதனிடையே நயனும் விக்கியும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்திருப்பதால் புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாவதை தவிர்த்து வருவதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் “இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. நானும் நயனும் அப்பா அம்மா ஆகி விட்டோம்” என பதிவிட்டு குழந்தைகளின் பிஞ்சு காலை கொஞ்சும் படியாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்கள் நயனுக்கு விக்கிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.

Image

Categories

Tech |