Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இத மட்டும் பண்ணுங்க மேடம்…. சசிகலாவுக்கு அட்வைஸ் பண்ண கே.பி.முனுசாமி…..!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஓரிரண்டு இடங்கள்தான் அதிமுகவுக்கு கிடைத்தன. இந்த தோல்வியை பயன்படுத்திக்கொண்ட சசிகலா கட்சிக்குள் நுழைய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு பாராட்டு மற்றும் ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கந்தநேரியில் உள்ள மாவட்ட புறநகர் அலுவலகத்தில் நடந்தது. அதில்  சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனிசாமி கலந்து கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “அதிமுகவிற்கும், சசிகலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மீது உண்மையான பற்று இருந்தால் சசிகலா இனி அரசியல் பேசக்கூடாது. அவர் கட்சிக்கு தொண்டராக வரவில்லை, ஜெயலலிதாவிற்கு உதவியாளராக வந்தவர். இதனை போலவே காமராஜர், மகாத்மா காந்தி போன்றவர்களுக்கும் பலர் உதவியாளர்களாக இருந்துள்ளனர்.

அவர்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லை. ஜெயலலிதாவிடம் இருந்து பிரிந்த சென்ற சசிகலா மீண்டும் ஜெயலலிதாவிடம் சேரும் போது ‘நானோ, எனது உறவினர்களோ அரசியலில் ஈடுபட மாட்டோம்’ என எழுதிக் கொடுத்து விட்டுத்தான் மீண்டும் இணைந்தார். அந்த வாக்கை சசிகலா கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். சசிகலா இனி அரசியல் பேசாமல் இருந்தாலே ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும்” என்று கூறிஉள்ளார்.

Categories

Tech |