சுமார் 3000 கோடி பட்ஜெட்டில் உருவான அவதார் 2 திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இது குறித்து திரைப்பட ஆய்வாளர் ரமேஷ் பாலா கூறுகையில், உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 300 கோடி வசூல் செய்துள்ளது.
இந்திய அளவில் மட்டும் முதல் நாளிலேயே 58 கோடி வசூல் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு திரைப்பட இணையதளங்களின் விவரங்களின் படி இந்த படம் இந்தியாவில் முதல் நாளில் 35 முதல் 38 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் முதல் நாளில் இந்திய பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் இதுதான் என்றும் கூறப்பட்டுள்ளது.