Categories
உலக செய்திகள்

அம்மாடியோ பிரதமர் இல்லத்தில் பேயா…? பிரதமர் அளித்த பேட்டி…. சுவாரசியமான ஒரு தொகுப்பு…!!!

பிரதமர் இல்லத்தில் இதுவரை பேய் பிசாசை பார்க்கவில்லை என ஜப்பான் பிரதமர் பேட்டியளித்துள்ளார்.

ஜப்பானில் கடந்த 1963ம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது.அப்போது பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூத்த அதிகாரி உட்பட பலர் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் அந்த அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்தில் பேய்கள் இருப்பதாக பல கட்டுக்கதைகள் எழுந்து வந்தன. இதனால் ஜப்பானில் கடந்த 8 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த ஷின்ஜோ அபே, அவருக்குப் பின்னர் ஒரு ஆண்டாக பதவி வகித்த யோஷிஹைட் சுகா ஆகிய இருவருமே பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கவில்லை.

இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் புதிய பிரதமராக புமியோ கிஷிடோ பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் தங்க வேண்டாம் என பலரும் எச்சரித்தனர். ஆனால் நேற்று முன் தினம் ஜப்பானின் புதிய பிரதமர் புமியோ கிஷிடோ பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு குடிபெயர்ந்தார். இதனை தொடர்ந்து நிருபர்கள் பலர் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நேற்று முன்தினம் நன்றாக தூங்கினேன். இதுவரை பிரதமர் இல்லத்தில் எந்த பெய்யும் நான் பார்க்கவில்லை என கிண்டலாக பதிலளித்தார்.

Categories

Tech |