நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற இவர்கள் அங்கிருந்து பல புகைப்படங்களை வெளியிட்டனர். பின்பு சென்னை திரும்பி அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த இவர்கள் திடீரென கடந்த வாரம் இரண்டாவது தேன்நிலவு சுற்றுப்பயணம் ஆக ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் அங்கிருக்கும் பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலான சிக்ஸ் சென்சஸ் என்ற ஹோட்டலில் தங்கி இருப்பது போன்ற புகைப்படங்களை விக்கி இன்ஸ்டால் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு நாள் வாடகை மட்டும் 45 ஆயிரம் ரூபாய் ஆகும் என்ற விவரம் தெரியவந்துள்ளது.சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நயன் தனது ஹனிமூனை காஸ்டிலியாக அனுபவித்து வருகிறார்.