Categories
உலக செய்திகள்

அம்மாடியோ… ஒரு கார் பார்க்கிங்க்கு ரூ 1.16 கோடியா… இதுக்கு ஏன் இவ்வளவு விலை…?

கார் நிறுத்துமிடம் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கார் நிறுத்தும் இடத்தை தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும். பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகளை தனியாகவும், கார் நிறுத்தும் இடத்தை தனியாகவும் விற்பனை செய்கின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சர்க்கஸ் மியூ என்ற பகுதியில் உள்ள எலெக்ட்ரிக் கேட், லைட் பொறுத்தப்பட்ட கார் பார்க்கிங் தற்போது விற்பனையாகியுள்ளது. வயட்லே ஹில்லேயர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும் இந்த கார் பார்க்கிங் இடத்தை விற்பனைக்கு அறிவித்தனர்.

இது நகரத்தின் மிக முக்கியமான இடத்தில் இருப்பதால் பெரும் விலைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பலரும் இந்த கார் பார்க்கிங்கை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டனர். கடைசியாக இந்த கார் பார்க்கிங் ஒரு லட்சம் யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 1.16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை யார் வாங்கினார் என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. ஆனால் இங்கிலாந்தில் இந்த ஆண்டு அதிக விலைக்கு விற்பனையான கார் பார்க்கிங் என்ற இடத்தை இந்த இடம் பிடித்துள்ளது. கார் நிறுத்தும் இடம் ஒரு கோடிக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |