ருமேனியா நாட்டில் உள்ள ஒரு கல்லறையில் 6500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கோடீஸ்வர பெண்ணின் சடலத்துடன் 169 தங்க மோதிரங்கள் மற்றும் வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.பெண்ணின் உடல் எறும்புகளாக கண்டறிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடக்கம் செய்யப்பட்டபோது உடன் இந்த நகைகள் சேர்ந்து புதைக்கப்பட்டதாக அருங்காட்சியாக இயக்குனர் கேப்ரியல் மொய்சா தெரிவித்துள்ளார். எலும்பு கூட்டின் அளவு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் இது ஒரு பெண்ணுடையது என அடையாளம் கண்டறிந்துள்ளனர்.
அந்தப் பெண் மிகவும் உயரமாக இருந்திருக்கிறார்.அவர் இறப்பதற்கு முன்பு பற்கள் நல்ல நிலையில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது அந்தப் பெண் மிகவும் செழிப்பான வாழ்க்கையை சொகுசாக வாழ்ந்துள்ளார். இந்த கண்டுபிடிப்புகளை ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு என முன்னணி தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.கோடி மதிப்புடைய பொக்கிஷங்களுடன் புதைக்கப்பட்ட பெண்ணை பற்றி மேலும் அறிய ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் அந்த எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.