Categories
சினிமா

அம்மாடியோ இவ்வளவா?…. பிக்பாஸ் 6-க்கு கமல் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா….????

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது ஆறாவது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளராக உள்ளார். இதனிடையே இந்த சீசனுக்கு அவருக்கு 75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. கடந்த சீசனில் 55 கோடி வாங்கி இருந்த நிலையில் இந்த முறை அதிரடியாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். மேலும் சினிமாவிலும் அவர் தனது சம்பளத்தை 130 கோடியாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |