Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இவ்வளவா?…. தமிழகத்தில் பேருந்து கட்டணம்…. எந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா….???

தமிழகத்தில் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இதனால் மக்களின் வசதிக்காக பல சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து முக்கிய நகரங்கள் செல்ல ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நிர்ணயம் செய்த கட்டண விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து கோவைக்கு ஏசி அல்லாத பேருந்துகளில் குறைந்தபட்சம் 1815 ரூபாய் அதிகபட்சம் 3,025 ரூபாய், மதுரைக்கு 1776 ரூபாய், வால்வோ ஸ்லீப்பரில் 2,688 ரூபாய், தென்காசிக்கு 2,079 ரூபாய், வால்வோ ஸ்லிப்பரில் 3,465 ரூபாய், சேலத்திற்கு 1435 ரூபாய், நெல்லைக்கு 2,063 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |