Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இத்தனை லட்சம் பேரா?…. அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் நிலவரப்படி அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 67,23,682 என தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். அவ்வகையில் அரசு வேலைக்காக பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்பரின் எண்ணிக்கையை ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அக்டோபர் மாத நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 67 லட்சத்து 23 ஆயிரத்து 682 என தெரிவித்துள்ளது. இதில் ஆண்கள் 31,40,532, பெண்கள் 35,82,882 , மூன்றாம் பாலினத்தவர் 268 பேர் என அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |