ஜிம் பாப்பாவை சேர்ந்தவர் மிஷெக்(66). இவருக்கு 16 மனைவிகள் 152 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறந்து. இவருக்கு வேலையே தன்னுடைய மனைவிகளையும், குழந்தைகளையும் முழுநேரமும் சந்தோஷப்படுத்துவது தானாம். இவர் தன்னுடைய மனைவிகளுக்காக சமையல் செய்வதும், வீடுகளை சுத்தம் செய்வதும் போன்ற தனது 16 மனைவிகளின் ஆசைகளை நிறைவேற்றுகிறார்.
இந்த காலத்தில் ஒரு திருமணம் செய்து குடும்பம் நடத்துவதே பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில், இவர் 16 பெண்களை திருமணம் செய்து தற்போது 17வது திருமணத்திற்கும் ரெடியாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவருடைய லட்சியம் இறப்பதற்கு முன்பாக 100 மனைவி மற்றும் 1000 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இவ்வளவு பெரிய குடும்பமாக இருந்தாலும் தன்னுடைய மனைவிகள் அனைவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தற்போது இரண்டு கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.