Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மன் பக்தர்களை பரவசப்படுத்துவதற்காக…. ஆடி மாத ஸ்பெஷல்…. படவேட்டம்மன் இசை வெளியீடு….!!!

படவேட்டம்மன் ஆன்மீக பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

அம்மனுக்கு ஆடி மாதத்தில் தான் அநேகமான சிறப்பு பூஜைகள் மற்றும் கொடை விழாக்கள் போன்றவைகள் நடத்தப்படும். இந்த ஆடி மாதத்தில் தான் பல்வேறு கோவில்களில் திருவிழாக்களும் நடைபெறும். இந்த ஆடி மாதத்தில் அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக படவேட்டம்மன் என்ற பாடல் உருவாகியுள்ளது. இந்த வீடியோ இசை பாடலை சுனில்.ஜி தயாரித்து நடித்துள்ளார். இந்தப் பாடலில் நடிகை ஹரிணி நடனமாடியுள்ளார். இந்த பாடல் வரிகளை முத்துக்குமார் எழுதியுள்ளார். இந்த பாடலை அனு ஆனந்த் பாடிள்ளார். இந்தப் பாடலின் வீடியோவை சிம்பொனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த பாடல் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாடலை உருவாக்க பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டனர். அதன் பிறகு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது சங்கர் கணேஷ் பேசியதாவது, நான் அம்மனின் தீவிர பக்தன் என்பதால் மாதந்தோறும்  திருவேற்காடு கோவிலுக்கு சென்று வருகிறேன். நான் கோவிலுக்கு சென்று விட்டு வாங்கி வரும் பிரசாதத்தை எம்ஜிஆர் மற்றும் ஜானகி அம்மாள் இருந்தவரை அவர்களுக்கு கொடுப்பேன். நான் அம்மனின் செல்லப்பிள்ளை. மேலும் படவேட்டம்மன் ஆன்மீக பாடல் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது எனவும், பாடலில் நடனமாடிய ஜனனி பார்ப்பதற்கு அம்மனை போல் இருக்கிறார் எனவும் கூறினார்.

Categories

Tech |