ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரத போராட்டத்தை அம்பிகா செல்வகுமார் நடத்தி வருகின்றார். பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு அம்பிகாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றன.
இனப்படுகொலைக்கு நீதிகேட்டு பிரித்தானியத் தலைநகர் லண்டனில் 16 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிங்கள அரசுக்கு ஆதரவான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரும்பிரித்தானிய அரசைக் கண்டித்து நீதிகேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த தீர்மானத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை கூறி, லண்டனில் வாழும் அம்பிகா செல்வகுமார் பிப்ரவரி 27ஆம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், அம்பிகாவிற்கு ஆதரவாக வடமேற்கு லண்டன், பென்டன் இல் உள்ள அவரது வீட்டிற்கு முன் குவிந்த தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன்பின் இனப்படுகொலைக்கு “நீதி வேண்டும் நீதி வேண்டும்” என்ற முழக்கங்களை எழுப்பி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.