Categories
Tech டெக்னாலஜி

“அமேசான் மற்றும் பிளிப்கார்ட்” 80 முதல் 85% தள்ளுபடி….. பண்டிகை கால விற்பனை தொடக்கம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவங்கள் இருக்கிறது. இந்த 2 நிறுவனங்களும் தற்போது பண்டிகை கால விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையானது அமேசான் நிறுவனத்தில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனை கடந்த 23-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் 2000-க்கும் மேற்பட்ட புதிய பொருட்களை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பிறகு எலக்ட்ரானிக் மற்றும் ஆக்சஸரீஸ் மீது 75% தள்ளுபடியும், ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 40 சதவீதம் தள்ளுபடியும், டிவி, போன்ற பொருட்களுக்கு 70 சதவீதம் தள்ளுபடியும், ஃபேஷன், வீடு, சமையலறை மற்றும் பிற பொருட்களுக்கு 80 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் flipkart நிறுவனமானது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்ஸெரிஸ் மீது 80 சதவீதம் தள்ளுபடியும், டிவி மற்றும் உபகரணங்களுக்கு 80 சதவீதம் தள்ளுபடியும், ஃபேஷன், அழகு சாதனங்கள், பொம்மை, விளையாட்டு மற்றும் பிற பொருட்களுக்கு 60 முதல் 80% தள்ளுபடியும்,‌ உணவு, பானங்கள், கிட்சன்-டைனிங்கில் 85 சதவீதம் தள்ளுபடியும், கதவு-மெத்தைகளுக்கு 85 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்களை இணைக்கும் வேலையை செய்வதுடன் பல்வேறு விதமான சலுகைகளை அறிவிப்பதால் ஏராளமான வாடிக்கையாளர்களை கவர்ந்து விற்பனையை அதிகரித்து லாபத்தை பெறுகின்றனர்.

Categories

Tech |