Categories
உலக செய்திகள்

“அமேசான் நிறுவனத்தில் தொழிற்சங்கம்”…. தொடர் முயற்சியில் கிடைத்த வெற்றி…..!!!!!

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அமேசான் நிறுவனம் குடோனில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதையடுத்து திடீரென்று பணிநீக்கம், போதிய சம்பளம் வழங்காதது ஆகிய புகார்களை அமேசானுக்கு எதிராக கூறிவந்த ஊழியர்கள், தொழிற்சங்கம் அமைக்க முயற்சி செய்தனர். இதைத் தடுக்க அந்த நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான தேர்தலில் அமேசான் ஊழியர்கள் வெற்றி பெற்றனர்.

உலகின் முன்னணி நிறுவனமாகவும், அமெரிக்காவின் 2ஆம் பெரிய நிறுவனமுமான அமேசானில் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டு இருப்பது தொழிலாளர் உரிமைக்கான போராட்டத்தில் முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அமேசான் நிறுவனம் கிளைகளில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு இது வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. தொழிற்சங்கம் அமைக்கும் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், பணியாளர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளைதையே விரும்புவதாகக் கூறியுள்ளது.

Categories

Tech |