Categories
உலக செய்திகள்

அமெரிக்க வலைத்தள பெண் பதிவர்… 15 நாள் கெடு… இம்ரான்கான் அரசு அதிரடி…!!!

அமெரிக்க வலைத்தள பெண் பதிவர் 15 நாட்களுக்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டுமென இம்ரான்கான் அரசு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிந்தியா ரிச்சி என்ற அமெரிக்க வலைத்தள பெண் பதிவர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். சர்ச்சைக்குரிய பதிவுகளால் பிரபலமடைந்த அவர் ட்விட்டரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ பற்றி ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவு அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி பாகிஸ்தான் முன்னாள் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள திருப்பம் கொண்டதாக சிந்தியா ரிச்சி தன்னிடம் கூறியதாக அவரின் நண்பரான டிவி பிரபலம் அலி சலிம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த சிந்தியா புரட்சியின் விசா கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி முடிவடைந்தது. அவர் மீதுள்ள வழக்கை விசாரணை செய்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், அவரின் விசா தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு முறையான உதவிகளை வழங்கவேண்டுமென இம்ரான்கான் அரசுக்கு இறுதி வாய்ப்பை அளித்துள்ளது. இந்நிலையில் சிந்தியா ரிச்சியின் விசா நீட்டிப்பு விண்ணப்பத்தை நிராகரித்து, அடுத்த 15 நாட்களுக்குள் அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டுமென இம்ரான்கான் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |