ஈராக்கில் அமெரிக்கப் படைத்தளம் அமைந்துள்ள விமானநிலையத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் மாகாணமான குர்திஸ்தானில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் அமைந்துள்ள அமெரிக்கப் படையினர் படைத்தளம் மீது குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களால் இந்த தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று குர்திஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதைப் போன்று ஏற்கனவே நடத்திய இன்னொரு ராக்கெட் தாக்குதலில் துருக்கிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது .