Categories
உலக செய்திகள்

“அமெரிக்க தூதரகத்தின் மீது 12 ஏவுகணைகள் வீசி தாக்குதல்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

அமெரிக்க தூதரகத்தின் மீது ஏவுகணைகள் வீசி  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈராக் நாட்டின் வடக்கே இர்பில் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இன்று 12 ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அண்டை நாடான ஈரானில் இருந்து இர்பில் நகரை நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் வெல்வேறு  கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். ஆனால் அமெரிக்காவின் மற்றொரு அதிகாரி ஒருவர் கூறியதாவது. “அமெரிக்காவின் அரசாங்கக் கட்டிடங்களில் உயிரிழப்புகள் மற்றும் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் அமெரிக்க தூதரகத்தை ஈராக் அதிகாரிகள் பல ஏவுகணைகளை வைத்து தாக்கி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவுக்கு பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதா என்று இதுவரை தகவல் இல்லை. மேலும் ஈராக் அரசு மற்றும் குர்திஷ் பிராந்திய அரசு இணைந்து இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 இதனை தொடர்ந்து உக்ரைன் மீதான போரை இலக்காகக் கொண்ட மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகள் பற்றிய ரஷிய கோரிக்கைகளின் மீது “இடைநிறுத்தம்” அடைந்துள்ளது மற்றும்  வியன்னாவில் தெஹ்ரானின் சிதைந்த அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளால் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |