Categories
சினிமா செய்திகள்

அமெரிக்க இராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை… பெத்தவங்கண்ணா இப்படி இருக்கணும்… குவியும் பாராட்டுக்கள்…!!!

நடிகையாக இருந்த அகிலா அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக சேர்ந்துள்ளார்.

நடிகை அகிலா நாராயணன் சென்ற 2021-ஆம் வருடம் வெளியான காதம்பரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் நடிப்பு மற்றும் இசை என இரண்டிலும் திறமை வாய்ந்தவராக உள்ளார். இந்நிலையில் இவர் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து இருக்கின்றார். அமெரிக்காவில் வாழும் தமிழ் பெண்ணான அகிலா சூரியநாராயணன் தன் சொந்த முயற்சியால் படத்தில் நடித்தார். இந்நிலையில் அகிலா நான் சினிமா துறையில் இருக்க வேண்டியவள் அல்ல.

நான் ராணுவத்தில் இருக்க வேண்டியவள் என குடும்பத்தில் கூறியுள்ளார்.  இதற்கு குடும்பத்தினர்கள் எவ்வித மறுப்பும் இன்றி சம்மதம் தெரிவித்துள்ளனர். அகிலா பட்டம் முடித்து அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக சேர்ந்து இருக்கின்றார். இதனால் முதல் முறையாக நடிகை ஒருவர் அமெரிக்க ராணுவத்தில் இணைந்து இருப்பது அனைவரையும் பெருமைபடுத்தியுள்ளது. இச்செயலால் இவருக்கு அனைவரும் சந்தோஷத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |