அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருவதை ஒட்டி கலை நிகழ்ச்சிகள் முன்னேற்பாடுகள் தீவிரம். பிரதமர் நேரில் சென்று வரவேற்க உள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்திற்கு வருகைதரும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு, பல லட்சம் பேரை திரட்டி வரவேற்பு கொடுக்க ஏற்பாடு தயார் செய்யப்பட்டு வருகின்றன.
வரும் 24ஆம் தேதி அகமதாபாத் வந்தடையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரது மனைவி மெலனி இருவரையும் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்று நேரில் வரவேற்கிறார்.
வரவேற்பை தொடர்ந்து, தம்பதி விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு சாலை வழியே செல்கிறார்கள். பின்னர் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்திற்கு தம்பதி செல்கின்றனர்.
அதிபர் ட்ரம்ப் செல்கிற பாதையில் 50 மேடைகள் அமைத்து அவற்றில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. தொடர்ந்து அதிபர் டிரம்ப் திறந்து வைக்கும் கிரிக்கெட் மைதானத்தில் நமஸ்தே ட்ரம்ப் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்றும் நம்பப்படுகிறது. தொடர்ந்து அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் ஆக்ரா செல்லும் அதிபர் டிரம்ப் தாஜ்மகாலை பார்வையிடுகிறார். இதற்காக தாஜ்மஹாலை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
தாஜ்மஹால் அமைந்துள்ள இடத்தில் இருந்து 500 மீட்டர் வரை பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த தடை உள்ளது. எனவே பெட்ரோல் வாகன ஓட்டிகள் மற்றும் அவரது மனைவியை அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அகமதாபாத் நகரில் வரவேற்பு நிகழ்ச்சியில் 70 லட்சம் கலந்துகொள்வார்கள் என்று அதிபர் டிரம்ப் அண்மையில் கூறியிருந்தார். ஆனால் அகமதாபாத் நகரில் மக்கள் தொகையே 70 லட்சம் என்றும் 2 அல்லது 3 லட்சம் மக்கள் வரை மட்டுமே கூடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.