தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வாயிலாக அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு செப்டம்பர் முதல் விசா நேர்காணல் நடத்தப்படும் என்று அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான ஆலோசகர் டொனால்ட் ஹெப்லின் பேசியதாவது “கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் விசா நடைமுறைகள் மீண்டுமாக முழுவீச்சில் தொடங்கப்படுகிறது என்று கூறினார்.
கொரோனா காலத்திற்கு முன் 12 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்ட சூழ்நிலையில், இந்த வருடம் 8 லட்சம் விசாக்கள் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். அவசரத்தேவைக்காக அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் எனவும் பொய்க்கூறி அவசரத் தேவை வசதியை பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.