Categories
உலக செய்திகள்

அமெரிக்கா கடற்கரையில் திடீரென்று மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி சூடு ..இருவர் பலி ..போலீசார் விசாரணை ..!!

அமெரிக்கா கடற்கரையில் திடீரென்று துப்பாக்கிதாரிகள் சுட்டதில்  இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக  தகவல் வெளியாகின .

அமெரிக்காவில் வர்ஜினியா கடற்கரையில் இரவில் துப்பாக்கிதாரிகள் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களை போலீசார் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.அந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும்  பலர் காயங்களுடன் தப்பி விட்டதாகவும் போலீசார் தகவல் வெளியிட்டனர். இதனை குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி தெரியவில்லை என்று கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தியதில் ஆழமான காயம் என்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்  என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |