அமெரிக்காவின் ஐ.டி நிறுவனத்தின் கம்பியூட்டரை அனுமதியின்றி இயக்கிய இந்தியர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 30 வயதுடைய இந்தியர் சுதிஸ் கசாபா ரமேஷ் என்பவர் வசித்துவருகிறார். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டரை முறையான அனுமதி இல்லாமல் இயக்கியுள்ளார். அதனால் அந்த நிறுவனத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணையானது நேற்று முன்தினம் நடந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி, அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வருகின்ற டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2,50,000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படும் என்று நீதிமன்ற வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.