Categories
உலக செய்திகள்

அமெரிக்கா எடுத்த முடிவு….  பதிலடி கொடுத்த சீனா ….. தீவிரமடையும் மோதல் …!!

அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்க துணை தூதரகத்தை மூடுவதற்கு சீனா உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்கா-சீனா இடையே உள்ள வர்த்தகம், தொழில்நுட்பம், கொரோனா வைரஸ், தென்சீனக் கடலில் சீனாவின் பிராந்திய உரிமை கோரல்கள், ஹாங்காங்கின் மீதான இறுக்கம் ஆகிய காரணங்களால் இரு நாட்டிற்கும் இடையே இருக்கின்ற உறவு மிகவும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன துணை தூதரகத்தை இந்த வார ஆரம்பத்தில் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலடி தரக்கூடிய வகையில் சீனா இன்று செங்டு நகரில் இருக்கின்ற அமெரிக்க துணை தூதரகத்தினை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது சர்வதேச சட்டம், சர்வதேச உறவுகளில் அடிப்படை விதிமுறைகள் மற்றும் சீனா அமெரிக்கா விதிமுறைகள் அனைத்தையும் மிக தீவிரமாக மீறி இருக்கின்றது. அதே சமயத்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே உள்ள உறவிற்கு மிக தீங்கு விளைவித்துள்ளதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சகம் சீனாவில் இருக்கின்ற அமெரிக்க தூதரகம் மற்றும் செங்டுவில் இருக்கின்ற அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் தங்களின் ஒப்புதலை திரும்ப பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.

Categories

Tech |