Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவுடன் விரிசல்”…. பிரபல நாடுகளுடன் நெருங்கும் பாகிஸ்தான்…. வெளியான முக்கிய தகவல்….!!

பாகிஸ்தானின் அமெரிக்காவுடனான உறவில் சிறு விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாடு ரஷ்யா மற்றும சீனாவை நோக்கி நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான்கான் அமெரிக்கப் படைகளுக்கு அந்நாட்டின் ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதி கொடுக்கவில்லை.

இதற்கிடையே அமெரிக்காவின் அதிபர் பொறுப்பை ஜோ பைடன் ஏற்றதிலிருந்து இம்ரான் கானும் அவரும் ஒரு முறை கூட தொடர்பு கொள்ளவில்லை. இதனையடுத்து பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் சீனாவின் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை காண்பதற்காக செல்லும்போது அந்நாட்டின் அதிபர் ஜின்னை சந்தித்துப் பேசியுள்ளார். அதேசமயம் சீனாவிற்கு போட்டியை காண ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புதினுன் வந்துள்ளார்.

ஆனால் இருவரும் அதிகாரபூர்வமாக சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானிற்கு அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள சிறிய விரிசலால் அந்நாடு ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கி நெருங்கி வருகிறது. அதன்படி இந்த மாதத்தின் இறுதியில் ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புதின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானனை சந்திக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |