அமெரிக்காவில் 9 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பற்றி அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது .
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் தென்கிழக்கில் உள்ள ஆரஞ்சு நகரில் வியாழக்கிழமை அன்று மர்ம நபர் ஒருவரால் 9 வயது சிறுவன் உட்பட 4 பேர் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். சமீபத்தில் 44 வயதான aminadab gaxiola gonzalez துப்பாக்கி சூடு நடத்தியதாக அவர் காயமடைந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹோட்டலில் தங்கியிருந்த gonzalez முகத்தை மறைத்தபடி வாடகை கார் ஒன்றில் வணிக வளாக கட்டிடத்திற்கு வந்துள்ளார். மேலும் அவர் தனது கையில் ஒரு செமி ஆட்டோமேடிக் கைத்துப்பாக்கி மற்றும் தனது தோல் பையில் பெப்பேர் ஸ்பிரே, வெடிமருந்து, கைவிலங்கு போன்ற பொருட்களையும் வைத்துள்ளார். அதற்குப்பின் அவர் யூனிஃபீட் ஹோம்ஸ் வணிகத்தை தாக்குதலில் ஈடுபட்ட போது ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஒன்பது வயது சிறுவன் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சந்தேக நபருக்கும் இடையில் தொழில் மற்றும் தனிப்பட்ட உறவில் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.மேலும் இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர் .