Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்…. நியூசிலாந்து பிரதமரிடம் ஆலோசனை….. வெளியான தகவல்…!!!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அமெரிக்காவிற்கு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நியூசிலாந்து பிரதமரிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துரையாடினார்.

அப்போது அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதால் வன்முறையை கையாளுவது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஆலோசனை வழங்கினார்.மேலும்  2019 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச்சில் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு  நியூசிலாந்து அரசு ராணுவ பாணி துப்பாக்கிகளை தடை செய்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தானிடம் அதிபர் ஜோ பைடன் பேசியது, காலநிலை மாற்றம் மீதான நடவடிக்கையை ஊக்குவிப்பதிலும், அதனை போல வன்முறை தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான உங்களது உலகளாவிய முயற்சி உங்கள் தலைமை முக்கிய பங்காற்றியுள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால் வன்முறையைக் கையாளுவது குறித்து ஆலோசனை பெற தயாராக உள்ளேன் என்று கூறினார்.

Categories

Tech |