அமெரிக்காவில் பெண் ஒருவர் இன்னொரு பெண்ணை துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ப்ரூக்லினில் இருக்கும் கடைக்கு நிக்கல் தாமஸ் என்ற 51 வயதான பெண் நடந்து செல்கிறார் .அப்போது திடீரென்று அவர் பின்னால் வந்த 38 வயதான லதீஷா பெல் என்ற பெண் துப்பாக்கியால் அவரை சுட்டு விடுகிறார். காயப்பட்ட நிக்கல் தாமஸ் போலீசாரின் உதவியால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் இருவரும் ஏற்கனவே நெருக்கமான உறவில் இருந்ததாகவும் தற்போது அவர்கள் இருவருக்கிடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.மேலும் உயிரிழந்த நிக்கலுக்கு 2 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது .இதனையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய லதிஷாவை காவல் நிலையத்திற்கு போலீசார் கொண்டு செல்லப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .