Categories
சினிமா தமிழ் சினிமா

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த டி. ராஜேந்தர்…. பூரண குணமடைந்ததாக தகவல்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் குணமடைந்து வீடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வரும் டி. ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக மேல் சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். இவர் தற்போது பூரணமாக குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது முழுமையாக குணம் அடைந்ததால், அமெரிக்காவிலிருந்து நாளை அதிகாலை 2 மணி அளவில் தன்னுடைய இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ் மற்றும் பேரன் ஜேசன் ஆகியோருடன் சென்னைக்கு திரும்புகிறார்.

இவர் சென்னைக்கு வந்த பிறகு தன்னுடைய மேல் சிகிச்சைக்கு உதவிய முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி கூற இருக்கிறார். மேலும் தன்னுடைய உடல்நலம் குணமடைய வேண்டும் என வேண்டுதல் செய்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினருக்கு டி. ராஜேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இதனையடுத்து சென்னை வரும் டி. ராஜேந்திரனுக்கு விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |