Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவரை கொன்றது ஏன்..? இதுதான் காரணமா..? கொரிய மாணவர் வாக்குமூலம்…!!!!

அமெரிக்காவின் இன்டியானா பர்டூ பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இந்தியாவைச் சேர்ந்த வருண் மணீஷ் சேடா (20) என்ற மாணவரும் இவருடன் கொரியாவை சேர்ந்த மின் ஜிம்மி ஷா என்ற மாணவரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் இவர்கள் இருவரும் அறையில் இருந்த போது மின் ஜிம்மி ஷா திடீரென மணீஷ் சேடாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து போலீசுக்கு போன் செய்து தான் தனது நண்பரை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதன் பின் போலீசார் அவரைகைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் மின் ஜிம்மி ஷா விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம் கொலைகாண காரணம் பற்றி கேட்டபோது தான் மிரட்டப்பட்டதாக தெரிவித்தார். இருப்பினும் அவர் இது பற்றி விவரமாக எதுவும் சொல்லவில்லை. அதே நேரம் அவர் வருண் மணீஷ் குடும்பத்தினரிடம் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |