அமெரிக்காவில் ஆசியா மீதான இனவெறி தாக்குதல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று முதலில் பரவ தொடங்கியதிலிருந்து கொரோனாவை பரப்பி விட்டது ஆசியர்கள் தான் என்று கூறி அமெரிக்கர்கள் அவர்களை முதலில் அடித்தார்கள் .தற்போது காரணமே இல்லாமல் அவர்களை பார்க்கும் இடம் எல்லாம் அடித்து தாக்குகிறார்கள். அதில் செவ்வாய்க்கிழமை அன்று நியூயார்க்கில் பெண்மணி ஒருவர் மீது வெள்ளையர்கள் சிறுநீர் கழித்து உள்ளனர்.
அதேபோன்று நியூயார்க் சுரங்க ரயிலில் 68 வயதான நாராயன்ஜெ போதி என்ற இலங்கையர் ஒருவர் வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போது 36 வயது கருப்பினத்தவரான மார்க் மாத்யூ கெட்ட வார்த்தையால் திட்டிய படி அவரை தாக்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. மார்க் போலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றம் இது இனவெறி தாக்குதல் தான் என்று உறுதிப்படுத்தியது .