Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் முக்கிய அறிவிப்பு….. தமிழ் பாரம்பரிய மாதமாக ஜனவரி மாதம்…!!

ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக அமெரிக்காவின் நான்கு முக்கிய நகரங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிற்கு தமிழ் வழியில் வந்தவர்களில்  பெரும்பாலானோர் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சுந்தர் பிச்சை, கமலா ஹாரிஸ், இந்திரா நூயி ,விஜய் அமிர்தராஜ்,சி. கே.  பிரகலாத் , மிண்டி கெய்லிங் , இவர்கள் அனைவரும் பல்வேறு துறைகளில் முக்கிய பங்களித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து புலம் புலம்பெயர்ந்தவர்களில்  சுமார் 60 ஆயிரம் பேர் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். அங்கு இருப்பவர்களுக்கு தமிழின் சிறப்பை அறியச் செய்யும் வகையிலும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. மேலும் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக கலிபோர்னியா மாகாணத்திலுள்ள நான்கு முக்கிய நகரங்களான போல் சோம், ரோஸ்வில், ராக்லின், ரான்சோகார்டோவா ,  ஆகியவற்றின் மேயர்களால்  பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் பாரம்பரிய மாதத்தின் நோக்கங்களாக சில காரணங்கள் உள்ளன அவைகளாவன, தமிழ்மக்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் குறித்த விழிப்புணர்வையும் எடுத்துக்கூறும் வகையில் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது.

மேலும் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் செழுமையை கொண்டாடுதல் உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் பாரம்பரியங்கள் கலைகள் மற்றும் கலாச்சாரங்களை கொண்டாடுதல், தமிழ் மக்களின் மொழி மற்றும் வரலாறு பற்றிய அனைத்து பின்னணியிலும் உள்ளதை கற்பித்தல் கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தில் தமிழர்கள் பல்வேறு துறைகளில் ஆட்சி சாதனைகளை எடுத்துரைத்தல் தமிழர்களின் வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னெடுத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

Categories

Tech |