ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலில் கைப்பற்றினர். தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. ஆயிரக்கணக்கான மக்களையும் வெளியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க முன்னரே தங்கள் படைகளை திரும்பப் பெற்றதே பதற்றத்திற்கு காரணம் என்று ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஜெர்மன் வெளியுறவுத் துறை, “இது மேற்கத்திய நாடுகளின் அரசியல் மற்றும் நம்பகத் தன்மையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவ நம்பிக்கை இன்மை மற்றும் துரோகத்தை உணர செய்யும்” என்று கூறியுள்ளது.