அபுதாபியில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ,அந்நாட்டின் துணை அதிபரும் , ஆட்சியாளரான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய தாயை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அபுதாபியில் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் துணை அதிபரான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் ‘அனைத்து அன்னையர்களும் ,எங்களுடைய வாழ்வின் அஸ்திவாரம்’ என்றும், ‘அன்னையர்கள் வைத்திருக்கும் அன்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை’ என்று கூறினார். இந்த வீடியோவில் அவர் தன்னுடைய தாயைப் பற்றி உருக்கமாக பேசினார். அதில் என்னுடைய தாயார் என்னை மிகவும் பாசத்தோடு அன்பாய் வளர்த்தார்.
இதுவரை அவரைப் போன்று என் மீது அன்பு செலுத்தியவரை நான் கண்டதில்லை. எனது தாயார் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி ,அவர்களின் தேவையை நிறைவேற்றுவார். என்னுடைய தாயார் 1983ம் ஆண்டு மரணம் அடைந்தார். அந்த நாள் எனக்கு மிகுந்த வருத்தத்தையும் ,சோகத்தையும் ஏற்படுத்தியது. அவரின் இறுதி சடங்குகள் மற்றும் அடக்கம் செய்யும் போது ,என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது ,என்று தன் தாயாருடன் வாழ்ந்த நினைவுகளை பற்றி ,அவர் அந்த வீடியோவில் உருக்கத்தோடு பேசினார் .