Categories
அரசியல்

அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி… சீக்ரெட் ரிப்போர்ட் அளித்ததாக வெளியான தகவல்…!!!!!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைநகர் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதிமுக ஒற்றை தலைமையாக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக அவர் டெல்லி சென்றுள்ளார். அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ பன்னீர் செல்வத்தை விட பல மடங்கு முன்னிலையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்தை தனக்கு சாதகமான பயணமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதற்கிடையே நேத்து பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி அமைச்சருடன் அரசியல் பேசவில்லை என கூறியுள்ளார். இந்த நிலையில் மதிய உள்துறை அமைச்சரிடம் எடப்பாடி பழனிசாமி ஒரு ரகசிய அறிக்கை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையில் திமுக அரசு ஊழல்கள், திமுக அமைச்சர்கள் ஊழல்கள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக திமுக அமைச்சர்கள் செய்திருக்கின்ற ஊழல்கள் பற்றியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி ரிப்போர்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை மையமாக வைத்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வீடுகளில் சிபிஐ அமலாக்க துறை வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி திமுக அமைச்சர்கள் ஊழல் பற்றி உள்துறை அமைச்சரிடம் அறிக்கை அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மகிழ்ச்சி ஊட்டும் விதமாக பதில் அளித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Categories

Tech |