அமித்ஷா எழுதிய கடிதத்தை திருப்பி அனுப்ப மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
அக்டோபர் மாதம் 12ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து முதல்வரின் தாய் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா முதல்வருக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தார்.
ஆனால் கடிதம் முழுவதுமாக இந்தியில் இருந்தது. இதனை அறிந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து, முதலமைச்சர் பழனிச்சாமியிடம் “எனக்கு ஹிந்தி தெரியாது. அதனால் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி அனுப்புமாறு கேட்டு அமித்ஷா அனுப்பிய கடிதத்தை அவருக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள்” என வேண்டுகோள் வைத்துள்ளார்.