பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து மாநில அரசுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. இதன் தாக்கத்திற்கு பாமர மனிதன் முதல் பெரிய பெரிய நபர்கள் வரை பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். கொரோனாவுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் காவலர்களும் உயிரிழக்கும் நிலையை நாடு முழுவதும்காணமுடிகிறது.
அதேபோல திரைபிரபலங்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அந்த வகையில்தான் நேற்று இரவு சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோன வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இந்த செய்தி இந்திய சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு மேற்கொண்ட கொரோனா சோதனையில் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இது இந்திய சினிமா துறையை நடுங்க வைத்துள்ளது.
Maharashtra: Actor Amitabh Bachchan has been taken to Nanavati hospital in Mumbai. More details awaited.
— ANI (@ANI) July 11, 2020