Categories
மாநில செய்திகள்

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மன்….. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011-15 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்க பிரிவும் 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி செந்தில் பாலாஜி உள்ளிட்டவருக்கு அமலாக்க பிரிவு சம்மன் அனுப்பியது.

இந்த சமனை எதிர்த்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த மனு நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில போலீசார் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடைவிதித்துள்ள நிலையில், இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறிய ஆவணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜி உள்ளிட்டவருக்கு எதிராக அமலாக்க பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.

Categories

Tech |