Categories
Uncategorized

அமமுக பொதுச்செயலாளராக…டி.டி.வி தினகரன் தேர்வு…!!

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின்  செய்தித்தொடர்பாளர் ஆர்.சரஸ்வதி டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயலாளராக  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்லில் அமமுகவுக்கு ஒரே சின்னம் ஒதுக்க முடியாது என்று  ஆணையம் கைவிரித்தது.ஒருவரது கட்சியை பதிவு செய்தால்தான் அவர்களுக்கு ஒரே சின்னம் அளிக்க முடியும் என்று ஆணையம் விளக்கம் அளித்த நிலையில் .ஒரு வாரத்தில் தனது அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டி.டி.வி. தினகரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

 

இந்நிலையில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி,  சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கட்சியின் பொதுச்செயலராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறினார் . இதன் மூலம்  தேர்தல் ஆணையம் அமமுகவுக்கு நிரந்தர சின்னத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Categories

Tech |