தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் போல இல்லாமல் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் சென்ற வருடம் வழங்கப்பட்ட 21 பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து ரொக்க பரிசு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், தற்போது இலவச, வேட்டி சேலைகள் வழங்குவது பற்றிய அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது. இதனால், மாதம் 1,000 பற்றிய அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த குடும்ப தலைவிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால், அரசு அதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறுகின்றனர் அரசு அதிகாரிகள்.