Categories
கிரிக்கெட் விளையாட்டு

அப்போ சிஎஸ்கே…. இப்ப இந்தியா…. “பௌலிங் குறித்து ஷர்தூல் தாகூர் ஓபன் டாக்”…. அப்படி என்ன சொன்னாரு….!!!

 பௌலிங் எப்படி செய்யலாம் என்பது குறித்து ஷர்தூல் தாகூர் கூறியுள்ளார். 

கொல்கத்தாவில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையிலான மூன்று நாள் டி20 நடந்து வருகின்றது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. மேற்கிந்திய தீவானது டாஸ் வென்று பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணி களம் இறங்கியது. இதில் இஷான் கிஷன்   34 (31), சூர்யகுமார் யாதவ் 65 (31), வெங்கடேஷ் ஐயர் 35 (19)  என ஆட்டத்தை நன்றாக விளையாடினார். இந்தியா 20 ஓவரில் 184/5 ரன்கள் எடுத்தனர். 185 ரன்கள் எடுக்க வேண்டும் என விளையாடிய மேற்கிந்திய தீவுகளில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 47 பந்துகளுக்கு 61 ரன்களும் எடுத்தார். பின்னர் ரோமாரியோ செய்ப்பர்ட் 21 பந்துகளுக்கு 29 ரன்களும், ராஸ்டன் சேஸ்  7 பந்துகளுக்கு 12  ரன்களும், ரௌமேன் பௌல் 14 பந்துகளுக்கு 25 என  ரன்களைச் சேர்த்தனர்.

20 ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 167/9 எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டத்தின் போது தீபக் சஹார் தசை பிடிப்பு காரணத்தினால் 1.5 ஓவரிலேயே வெளியேறிவிட்டார். இதனால் ஷர்துல் தாகூர் பந்துவீசினார். 33 ரன்கள் எடுக்க விட்டு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதி ஓவரில் எதிரணிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 5 ரன்களை மட்டுமே எடுக்க விட்டார். கிரிக்கெட் முடிந்தவுடன் பேசிய ஷர்துல் தாகூர், “சென்ற நான்கு ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்கு டெத் ஓவரில் பந்து வீசினேன். இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு டெத் ஓவரில் பந்துவீசி இருக்கின்றேன். அனைத்து இந்திய பவுலர்கள் ஒரே மாதிரியான பந்து வீசாமல் யார்க்கர் ஸ்லோ பால் உள்ளிட்டவற்றை முயற்சி செய்ய வேண்டும். இவற்றை முயற்சி செய்யும்போது ஆறு அல்லது நான்கு சென்று விட்டால் பதற்றமின்றி மீண்டும் போட வேண்டும். இதிலும் ஒயிட் யார்க்கர் வீசுவது சிறந்தது. ஸ்லோ யார்க்கரும் கைகொடுக்கும்” என கூறியுள்ளார்.

Categories

Tech |