தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சித்தார்த்.இவரும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக அண்மைக்காலமாக ஒரு தகவல் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இவர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.இந்நிலையில் அதிதி ராவ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில் இதய இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அது மட்டுமல்லாமல் அவருடன் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சித்தார்த் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் இவர்களின் காதல் உறுதியானதாக பதிவிட்டு அந்த புகைப்படத்தை தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க