தமிழக அரசு 150% சொத்துவரி உயர்வு என்ற அதிர்ச்சி அறிவிப்பால் மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் தனக்கென கட்டிய சின்னஞ்சிறு வீடுகளுக்கு சொத்து வரி கட்ட முடியாமல் அல்லல் படும் நிலையையும், வாடகைக்கு குடி இருப்பவர்கள் மீது வீட்டு உரிமையாளர்கள் சொத்து வரியை சேர்த்து உயர்த்துவதும், மேலும் வணிக நிறுவனங்கள் சொத்து வரி உயர்வை பொருட்களின் மீது வைத்து விலையை உயர்த்தும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஆட்சியில் இல்லாதபோது சொத்து வரியை கடுமையாகப் எதிர்த்த திமுக ஆட்சியை பிடித்ததும் அதையே செய்கிறது. திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சொத்து வரி உயர்ந்திருப்பது வீட்டு வாடகை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று கூறிய அவர், திமுக அரசு சொத்து வரியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.