நெல்லை மாவட்டத்தில் திமுக சுவரொட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் வாக்கு சேகரிப்போர் வாக்காளர்களுக்கு பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ அளிக்காமலிருக்க அனைத்து பகுதிகளிலும் தேர்தல் குழு பறக்கும் படையினரை நியமித்தனர். இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் காவல்துறையினர்களும் துணை ராணுவ படையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது அவ்வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது அதில் திமுக கட்சியின் சுவரொட்டிகளும் விளம்பரப் பொருட்களும் இருந்திருக்கிறது. மேலும் அவ்வண்டியில் அரசியல்ரீதியான பொருள்கள் இருந்ததால் பணம் இருக்கிறதா என்று தீவிரமாக சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இருப்பினும் அதில் கட்சி பொருட்கள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.