கோவை மாவட்டத்தில் கடன் தொல்லை காரணமாக அக்கா, தம்பி இருவரும் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் பரமேஸ்வரன் அலமேலு என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு திருமண வயதில் பிரீத்தா என்ற மகளும், அருண்குமார் என்ற மகனும் இருக்கின்றனர். அவர் மகன் அருண்குமார் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
அவர் தனது அக்கா பிரீத்ததாவுக்கு மனநலம் பாதிப்பு சிகிச்சைக்கு உண்டான செலவினை செய்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களிலேயே அருண் குமாரின் தந்தை உயிரிழந்தார். இதனை அடுத்து ஒரு வருடத்தில் அருண்குமார் வீடு கட்ட ஆரம்பித்தார் அதனை முடிப்பதற்கு அவர் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனை கேட்டு வருபவர்களுக்கு திருப்பி செலுத்த முடியவில்லை என்ற எண்ணத்தில் தான் இறந்து போவதே சரி என்று அருண்குமார் நினைத்தார்.
ஆனால் தான் இறந்து போனால் அக்காவை யார் பார்ப்பது என்ற எண்ணத்தில் இருவரும் இறந்து போவதே சரி என்று நினைத்து தனது வீட்டின் பின்னால் இருந்த 12அடி தண்ணீர் தொட்டியில் இருவரும் விழுந்து இரும்பு கதவினை மூடி விட்டனர். அதன்பின் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய அலமேலு தனது பிள்ளைகளை காணவில்லை என்று அக்கம்பக்கத்தில் விசாரித்தார். அதன் பின்பு 2 மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை என்று அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வீட்டிற்கு வந்து விசாரித்தனர். அப்போது காவல்துறையினர் வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருவரும் பிணமாக கிடப்பதை பார்த்தனர். எனவே அவர்கள் இருவரும் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அதன்பின் அவர்களின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பினார்கள் .
மேலும் இறப்பதற்கு முன்பே அருண்குமார் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றினர். அதில் அக்காவிற்கு சிகிச்சை அழிக்க முடியவில்லை என்றும், வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்றும் இதனால் அப்பா சென்ற இடத்திற்கே நாங்களும் செல்கிறோம் என்று மன அழுத்தத்துடன் கைப்பட எழுதப்பட்டு இருந்தது. அதனை கேட்டதும் அருண் குமாரின் தாய் கதறி அழுதார்.இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.