தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் மூத்த மகன் யாத்ரா களமிறங்கியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல ஜோடிகளான ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து திருமணம் செய்து 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தார்கள், நண்பர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைப்பதாக களமிறங்கியுள்ளார் மூத்தமகன் யாத்திரா. இவருக்கு 15 வயது என்றாலும் மிகவும் மெச்சுராக பேசுவாராம். இந்நிலையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அம்மாவிடம் அப்பாவை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றாராம் யாத்ரா. ஆனால் ஐஸ்வர்யா, யாத்ரா தனுஷை பற்றி பேசும்போது திசை திருப்பி விடுகின்றாராம். யாத்ராவின் இந்த செயல் ரஜினியை கவர்ந்துள்ள நிலையில் தனுஷ் உடன் வாழ ஐஸ்வர்யாவுக்கு விருப்பம் இல்லையாம். இருப்பினும் யாத்ரா இதை சும்மாவிடப் போவதில்லையாம்.