ஜெனீவாவில் நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய கொரோனா பாதிப்பு வாராந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் உலக அளவில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு 20% உயர்ந்துள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 80 லட்சமாக பதிவாகி இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையின் மூலம் ஒமிக்ரான் மாறுபாட்டால் ஏற்பட்ட கொரோனா பரவல் எழுச்சி தற்போது குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு அதற்கு முந்தைய வாரம் 50 சதவீதமாக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.