Categories
அரசியல்

அப்பவே தூக்கி உள்ள போட்டிருந்தா…. இப்படி பேசியிருக்க மாட்டாரு…. செக் வைத்த வேல்முருகன்…!!!

தமிழக அரசானது பாஜக மூத்த தலைவரான ஹெச் ராஜா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “பாஜகவினர் தொடர்ச்சியாக, ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத் துறையை இழிவாக பேசுவது மற்றும் அவமரியாதை செய்வது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். பெண் பத்திரிகையாளர் உட்பட, அனைத்து பத்திரிகையாளர்களையும் இழிவுப்படுத்தி கடந்த 2018ஆம் ஆண்டு, பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர்  தனது கருத்தை தெரிவித்திருந்தார். இதைபோல் பெண் பத்திரிகையாளர்களை ஹெச் ராஜாவும் இழிவுபடுத்தி பேசியுள்ளார்.

காவல்துறையினர் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் போராடிய பத்திரிக்கையாளர்களை கைது செய்தார்கள். ஹெச் ராஜா மற்றும் எஸ் வி சேகர் மீது நடவடிக்கை மேற்கொள்ள கடந்த அதிமுக அரசானது பயந்து நடுங்கியது. கடந்த அதிமுக ஆட்சியில் ஹெச். ராஜா மற்றும் எஸ் வி சேகர் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தால் தற்போது மீண்டும் ஹெச். ராசா ஊடகத்துறையை இழிவுபடுத்தியும் மற்றும் அவதூறான வார்த்தைகளையும் கூறியுள்ளார்.

இதனால் தமிழக அரசானது  ஊடகத் துறையினரை இழிவுபடுத்திய இவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்னர் ஊடகத்துறையை  இழிவுபடுத்தும் இவர் போன்றவர்களை ஊடகத்துறையும்  புறக்கணிக்க  வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |