எகிப்து நாட்டின் வடக்கு மாகாணமான நைல் டெல்டாவில் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது டகாலியா மாகாணம் அகாநகர் பகுதியில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய பலரும் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும் பலர் தண்ணீரில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் உடனே மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 21 பேர் பலியாகினர். எஞ்சிய 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Categories
அப்பளம் போல நொறுங்கிய பேருந்து…. 21 பேர் துடிதுடிக்க மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!!
